அரசு பஸ் டயர் பஞ்சர் பயணியர் அவதி
அரசு பஸ் டயர் பஞ்சர் பயணியர் அவதி
அரசு பஸ் டயர் பஞ்சர் பயணியர் அவதி
ADDED : அக் 23, 2025 12:48 AM

பல்லடம்: திருப்பூரில் இருந்து நேற்று மாலை உடுமலை புறப்பட்ட அரசு பஸ் (டிஎன்.33.என்.3201)5.30 மணியளவில், பல்லடம் பஸ் ஸ்டாண்டில் பயணிகளை ஏற்றியது; பின், உடுமலைரோட்டில் செல்லும்போது, பின்பக்க டயர் பஞ்சர் ஆனது.
பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டனர். மாற்று பஸ்சுக்காக அரை மணி நேரம் வரை பயணிகள் காத்திருக்க, திருப்பூரில் இருந்து வந்த மற்றொரு பஸ்சில் கூட்ட நெரிசலாக இருந்தது. ஒரு சிலர் மட்டுமே அதில் ஏற முடிந்தது.
மீதமிருந்த பயணிகள், கூடுதல் நேரம் காத்திருந்து, அடுத்த பஸ்சில் சென்றனர். வேலை முடிந்து, வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்ற எதிர்பார்ப்புடன்பயணித்த பலரும் அவதிக்குள்ளாகினர்.


