Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பென்ஷனர் சங்க கூட்டம்

பென்ஷனர் சங்க கூட்டம்

பென்ஷனர் சங்க கூட்டம்

பென்ஷனர் சங்க கூட்டம்

ADDED : செப் 30, 2025 11:56 PM


Google News
திருப்பூர்; திருப்பூர் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நலச்சங்கத்தின், 10வது ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம், திருப்பூர் லயன்ஸ் சங்க மண்டபத்தில் நடந்தது.

சங்க உதவி செயலாளர் ராஜகோபால் வரவேற்றார். சங்க செயலாளர் ஜோசப் ரெஜிஸ், ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் வெங்கடாசலபதி, வரவு செலவு கணக்கு அறிக்கை தாக்கல் செய்தார். தோழமை சங்க பொறுப்பாளர்கள் மோகன், ஆறுசாமி, சம்பத்குமார், கணபதி ஆகியோர் பேசினர்.

அரசு ஊழியர் சங்க செயலாளர் திருஞானசேகரன், மத்திய, மாநில சங்க பேரமைப்பு மாநில பொது செயலாளர் வெங்கடேசன், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் சங்கங்களின் மாநில துணைத் தலைவர் முத்துசாமி, பொருளாளர் கோபால் ஆகியோர் பேசினர்.'எட்டாவது ஊதியக்குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.

ஓய்வூதியதாரர்களுக்கான சலுகையை தொடர்ந்து வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிதாக சங்கத்தில் இணைந்த உறுப்பினர்கள் மற்றும், 80 வயது நிறைவடைந்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர். முடிவில், ராதாகிருஷ்ணன், நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us