/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மக்கள் மனு மீது கவனம் செலுத்தணும்! மாவட்ட எஸ்.பி., அறிவுரைமக்கள் மனு மீது கவனம் செலுத்தணும்! மாவட்ட எஸ்.பி., அறிவுரை
மக்கள் மனு மீது கவனம் செலுத்தணும்! மாவட்ட எஸ்.பி., அறிவுரை
மக்கள் மனு மீது கவனம் செலுத்தணும்! மாவட்ட எஸ்.பி., அறிவுரை
மக்கள் மனு மீது கவனம் செலுத்தணும்! மாவட்ட எஸ்.பி., அறிவுரை
ADDED : பிப் 12, 2024 12:41 AM
உடுமலை:''மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மக்கள் தரும் புகார் மனுக்கள் மீது, கவனம் செலுத்தி விசாரிக்க வேண்டும்'' என டி.எஸ்.பி.,க்களுக்கு, திருப்பூர் எஸ்.பி., அபிஷேக் குப்தா அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பூர் மாநகர வடக்கு துணை கமிஷனர் அபிஷேக் குப்தா, திருப்பூர் மாவட்ட எஸ்.பி., யாக கடந்த இரு வாரங்களுக்கு முன் பொறுப்பேற்றார்.
சில நாட்களுக்கு முன் டி.எஸ்.பி., - இன்ஸ்பெக்டர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.
அதில், சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட ஸ்டேஷன் பகுதியில் மது, லாட்டரி என எந்தவிதமான சட்டவிரோத செயல்களும் நடக்கக்கூடாது.
ஸ்டேஷன்களுக்கு வரக்கூடிய புகார்களை முறையாக விசாரிக்க வேண்டும். முதல்வருக்கு சென்றுள்ள புகார் தொடர்பான மனுக்கள் மீது கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தற்போது வரை, காங்கயம், உடுமலை உள்ளிட்ட சில சப்-டிவிஷன்களை பார்வையிட்டு அங்குள்ள போலீசாருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
150 பேர் இடமாற்றம்
பொறுப்பேற்ற உடன் முதல் பணியாக, மூன்றாண்டுகளை கடந்துள்ள போலீசாரின் பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டார். அவ்வகையில் இதுவரை, 150 போலீசார் மாவட்டத்துக்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களும், ஓரிரு நாட்களில் மாற்றப்பட உள்ளனர்.
குற்றங்களை தடுக்கவும், சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மாவட்ட அளவில் எஸ்.பி., தலைமையில் உள்ள தனிப்படை தவிர்த்து, சப் - டிவிஷன்களில் விடுபட்ட இடங்களில் தனிப்படைகளை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் டி.எஸ்.பி., மேற்பார்வையில் செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த 2 முதல் 8ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவது தொடர்பான புகாரின் அடிப்படையில் போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்தனர். அதில், 11 வழக்கில், 22 பேர் கைது செய்யப்பட்டு, 17 பெண்கள் மீட்கப்பட்டு ஹோமில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதிய தனிப்படைகள்
திருப்பூர் எஸ்.பி., அபிஷேக் குப்தா கூறியதாவது:
வழக்குகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது. அதில், சில அறிவுரைகள் வழங்கப்பட்டன.
குறிப்பாக, முதல்வர் தனிப்பிரிவு தொடர்பான மனு உள்ளிட்டவை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில் நடந்த ஒன்றிரண்டு திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ளவற்றில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே உள்ள தனிப்படையை தவிர்த்து, இல்லாத இடங்களில் புதிதாக தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டு, டி.எஸ்.பி.,க்கள் கண்காணித்து வருகின்றனர்.