/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இடியும் ரேஷன் கடை கட்டடம் புதுப்பிக்க மக்கள் எதிர்பார்ப்பு இடியும் ரேஷன் கடை கட்டடம் புதுப்பிக்க மக்கள் எதிர்பார்ப்பு
இடியும் ரேஷன் கடை கட்டடம் புதுப்பிக்க மக்கள் எதிர்பார்ப்பு
இடியும் ரேஷன் கடை கட்டடம் புதுப்பிக்க மக்கள் எதிர்பார்ப்பு
இடியும் ரேஷன் கடை கட்டடம் புதுப்பிக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 28, 2025 11:51 PM

உடுமலை, ; இடிந்து விழும் நிலையிலுள்ள, ரேஷன்கடை கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும் என,வல்லக்குண்டாபுரம் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வகையில், ரேஷன்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், உடுமலை பகுதியில் பெரும்பாலான கடைகள் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும், பராமரிப்பு இன்றியும் உள்ளன. இவற்றை சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளிடம் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
குடிமங்கலம் ஒன்றியம், விருகல்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ், வல்லக்குண்டாபுரம் கிராமத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. அப்பகுதியை சேர்ந்த, 700க்கும் அதிகமான ரேஷன்கார்டுதாரர்கள் இக்கடையால் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ரேஷன் கடை கட்டடம் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது.மழைக்காலங்களில் மேற்கூரைவிரிசல் வழியாக, மழைநீர் உள்ளே புகுந்து விடுகிறது. இதனால், ரேஷன் பொருட்களை பாதுகாக்க பணியாளர்கள் போராடும் நிலை உள்ளது. மக்கள் காத்திருக்கும் பகுதியிலும், கட்டடம் வலுவிழந்து கான்கிரீட் பூச்சு உதிர்ந்து வருகிறது. இதனால், மக்கள் அச்சத்துடன் அப்பகுதியில் நிற்க வேண்டியுள்ளது. மழைக்காலத்தில்ரேஷன் பொருட்கள் வினியோகம் பாதிக்கும் நிலை உள்ளது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு கூட்டுறவு துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் கடையை புதுப்பிக்க வேண்டும் என, அப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.