/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சீதோஷ்ண மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு: மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைசீதோஷ்ண மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு: மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சீதோஷ்ண மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு: மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சீதோஷ்ண மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு: மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சீதோஷ்ண மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்பு: மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ADDED : பிப் 02, 2024 12:35 AM
உடுமலை;சீதோஷ்ண நிலை மாற்றத்தால், சிலர் வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி வருவதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், சிகிச்சை பெறுவோர் விபரம் சேகரிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த சில தினங்களாக, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில், இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது. சீதோஷ்ண நிலை மாறுபாட்டுடன் காணப்படுகிறது.
வெயிலும், பனியும் மக்களை பாதிப்படையச்செய்கிறது. இதன் காரணமாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சிலர், காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
அரசு மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனைகளில் வழக்கத்துக்கு மாறாக, காய்ச்சல் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவை, சாதாரண காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் என்ற நிலையில் உள்ளது.
இதன் காரணமாக, காய்ச்சல் பாதிப்புடைய நபர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களின் குடியிருப்புக்கு நேரடியாகச்சென்று, கொசு ஒழிப்பு மருந்து தெளித்து, சுகாதாரம் பேண சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சுகாதாரத்துறையினர் கூறியதாவது: உடுமலை நகரில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால், சிலர், வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இதனால், நாள்தோறும், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து, காய்ச்சல் நோயாளிகள் விபரம் சேகரிக்கப்படுகிறது.
சிலர், உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுவதால், அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. தண்ணீரை நன்கு காய வைத்து, ஆறிய பின்னரே குடிக்க வேண்டும்.
காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டால், டாக்டரிடம் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும். தாமாக, மருந்துக்கடைகளுக்குச் சென்று, மாத்திரை வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.


