/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தேர்தல் அறிக்கை பட்டியல்: விசைத்தறியாளர்கள் தயாரிப்புதேர்தல் அறிக்கை பட்டியல்: விசைத்தறியாளர்கள் தயாரிப்பு
தேர்தல் அறிக்கை பட்டியல்: விசைத்தறியாளர்கள் தயாரிப்பு
தேர்தல் அறிக்கை பட்டியல்: விசைத்தறியாளர்கள் தயாரிப்பு
தேர்தல் அறிக்கை பட்டியல்: விசைத்தறியாளர்கள் தயாரிப்பு
ADDED : பிப் 10, 2024 11:42 PM
பல்லடம்:லோக்சபா தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளிடம் வழங்குவதற்கான, 6 கோரிக்கைகள் அடங்கிய தேர்தல் அறிக்கை பட்டியலை, திருப்பூர் - கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் தயாரித்துள்ளனர்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, தேர்தல் அறிக்கை பட்டியல் ஒன்றை திருப்பூர் - கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் தயாரித்துள்ளனர்.
இதில் இடம்பெற்றுள்ள ஆறு கோரிக்கைகள்:
கைத்தறிகளுக்கு ஒதுக்கப்பட்டது போல், விசைத்தறிகளுக்கும், ரக ஒதுக்கீடு சட்டம் கொண்டுவர வேண்டும்.
மத்திய அரசின் துறைகளான ராணுவம், தபால் துறை, ரயில்வே, மருத்துவம் ஆகியவற்றுக்கு சீருடைகள் விசைத்தறிகளில் தயாரிக்க அனுமதிக்க வேண்டும்.
மருத்துவமனைகளுக்கு தேவையான மெத்தை மற்றும் தலையணை உறை, மெத்தை விரிப்பு, ரயில் பயணிகளுக்கான பெட்ஷீட், தலையணை ஆகியவற்றுக்கான ஆர்டர்களை விசைத்தறிகளுக்கு வழங்க வேண்டும்.
மத்திய அரசின் நுாறு சதவீத நிதி உதவியுடன் விசைத்தறிக்கூடங்களுக்கு சோலார் பேனல் அமைத்து பசுமை மின் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
விசைத்தறி தொழிலாளருக்கான தனி காப்பீடு திட்டம் கடந்த நான்கு ஆண்டுகளாக கைவிடப்பட்டுள்ளது. இதை மீண்டும் கொண்டு வந்து உதவித்தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும்.
சாதாரண விசைத்தறிகளை நாடா இல்லா தறிகளாக மாற்ற நுாறு சதவீதம் மானியம் வழங்க வேண்டும்.
விசைத்தறியாளர்கள் சொந்தமாக உற்பத்தி செய்து வருவாயை பெருக்கிக் கொள்ள வசதியாக நுால் வங்கி திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
திருப்பூர் - கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், 'நாடு முழுவதும் உள்ள விசைத்தறியாளர்கள் பயன்பெறும் வகையில் தேர்தல் அறிக்கை பட்டியல் தயாரித்துள்ளோம். இவை, நீண்ட காலமாக உள்ள கோரிக்கைகளாகும். இவற்றை, லோக்சபா தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்துக் கட்சியினரிடமும் வழங்க உள்ளோம்'' என்றார்.