/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'ராம்ராஜ் காட்டன்' ரத்த தான முகாம் 'ராம்ராஜ் காட்டன்' ரத்த தான முகாம்
'ராம்ராஜ் காட்டன்' ரத்த தான முகாம்
'ராம்ராஜ் காட்டன்' ரத்த தான முகாம்
'ராம்ராஜ் காட்டன்' ரத்த தான முகாம்
ADDED : ஜூன் 15, 2025 04:02 AM
திருப்பூர்: உலக ரத்த தான நாளை முன்னிட்டு, ராம்ராஜ் காட்டன் நிறுவன ஊழியர்கள் பங்கேற்ற ரத்த தான முகாம், திருப்பூர், மங்கலம் சாலையில் உள்ள ராம்ராஜ் காட்டன் தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது.
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் திருப்பூர் தொழிற்சாலைகளிலும், ஈரோடு மற்றும் மதுரையில் உள்ள தொழிற்சாலைகளிலும் நடந்தது. இணை நிர்வாக இயக்குனர் அஸ்வின் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ரத்த தான முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
''சமுதாயத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒவ்வொரு உயிருக்கும் பயன்படும் உயர்ந்த சேவையான ரத்த தான முகாமில் பங்கேற்று ரத்தம் வழங்கியதன் மூலம் மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைகிறோம்' என ஊழியர்கள் கூறினர்.