ADDED : பிப் 24, 2024 11:03 PM
திருப்பூர்:திருப்பூரில், ரேஷன் அரிசியை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த நபரை கைது செய்து, ஒரு டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வீரபாண்டி, முருகம்பாளையத்தில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விற்பனைக்காக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது குறித்து தகவல் தெரிந்து சோதனை மேற்கொண்டனர்.
முருகன், 35 என்பவர், அப்பகுதி மக்களிடம் அரிசியை விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்று வந்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், ஆயிரத்து, 70 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.