/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வடக்கில் சாலை பணி: தெற்கில் வாகன நெரிசல்!வடக்கில் சாலை பணி: தெற்கில் வாகன நெரிசல்!
வடக்கில் சாலை பணி: தெற்கில் வாகன நெரிசல்!
வடக்கில் சாலை பணி: தெற்கில் வாகன நெரிசல்!
வடக்கில் சாலை பணி: தெற்கில் வாகன நெரிசல்!
ADDED : ஜன 28, 2024 12:00 AM

திருப்பூர்:ரயில்வே பாதையின் வடக்கு பகுதியில் ரோடு பணி மேற்கொள்ளப்பட்டதால், தெற்கு புறத்தில் உள்ள ஊத்துக்குளி ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கடாசலபதி மாநகராட்சி பள்ளி வீதி, திருப்பூர் ரயில்வே பாதையின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. ஊத்துக்குளி ரோட்டில் உள்ள இரண்டாவது ரயில்வே கேட், ஒற்றைக் கண் பாலம் ஆகிய பாதை வழியாக இந்த ரோட்டுக்கு செல்லலாம். மெயின் ரோடு, அப்பாச்சி நகர் பகுதிகளுக்கு இணைப்பு ரோடாக இது உள்ளது.
மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், புதிய ரோடு அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக பள்ளி வீதியில் முழுமையாக வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், ஊத்துக்குளி ரோட்டிலிருந்து ஒற்றைக் கண் பாலம் வழியாக உள்ள பாதை முற்றிலும் மூடப்பட்டு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழியாக செல்லும் வாகனங்கள் இரண்டாவது ரயில்வே கேட்டைக் கடந்து செல்கின்றன. இந்நிலையில் ரயில் கடந்து செல்ல கேட் மூடப்படும் போது, ஊத்துக்குளி ரோட்டிலிருந்து மூன்று திசைகளிலிருந்து வரும் வாகனங்கள் இதனை கடந்து செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
ஒன்றுக்கொன்று முந்தி வரும் வாகன ஓட்டிகளால் பல நேரங்களில் இந்த இடத்தில் அனைத்து ரோடுகளிலும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட நேரம் நின்று செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. கடுமையான வாகன நெரிசல் இந்த ரோட்டில் பல நேரம் காணப்பட்டது. அங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் அவ்வப்போது ரோட்டில் இறங்கி நின்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.