/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சாலையோர ஆக்கிரமிப்பு; அவிநாசியில் அதிரடி அகற்றம் சாலையோர ஆக்கிரமிப்பு; அவிநாசியில் அதிரடி அகற்றம்
சாலையோர ஆக்கிரமிப்பு; அவிநாசியில் அதிரடி அகற்றம்
சாலையோர ஆக்கிரமிப்பு; அவிநாசியில் அதிரடி அகற்றம்
சாலையோர ஆக்கிரமிப்பு; அவிநாசியில் அதிரடி அகற்றம்
ADDED : செப் 26, 2025 06:44 AM

அவிநாசி; அவிநாசியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டன.
அவிநாசி, சேவூர் ரோடு பிரிவு முதல், சூளை வரை, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் செங்குட்டுவேல், டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராஜபிரபு மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளவர்கள் தங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும். தவறினால், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, கிழக்கு ரத வீதியில் பெண் ஒருவர் வைத்திருந்த பழக்கடையை அகற்றினர்.
அப்போது தனது கடையை அகற்றினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் கூச்சலிட்டார். தொடர்ந்து அவருக்கு ஆதரவாக சாலையோரத்தில் கடைகளை வைத்துள்ள பெண்களும் இணைந்து கொண்டு, கடைகளை அகற்றக் கூடாது என கோஷமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, இ.கம்யூ. மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினரும் ஆக்கிரமிப்பை அகற்றிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசாருக்கு எதிராக கோஷமிட்டு கண்டனம் தெரிவித்தனர்.
இதனால், சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அனைத்து பகுதிகளிலும் கடைகள் முன்பு அமைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள், தகர ஷெட், பிளக்ஸ் போர்டுகள் ஆகியனவற்றையும் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.