/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'சைமா' சங்க நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு 'சைமா' சங்க நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு
'சைமா' சங்க நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு
'சைமா' சங்க நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு
'சைமா' சங்க நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு
ADDED : செப் 24, 2025 12:14 AM
திருப்பூர்; திருப்பூரில், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா), 1956ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, நிர்வாகக்குழு தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த முறை, தேர்வான நிர்வாகக்குழு, அப்படியே மூன்று ஆண்டுகளுக்கு தொடரலாம் என்று உத்தேசிக்கப்பட்டது.
இருப்பினும், உறுப்பினர்களின் எதிர்ப்பால், மீண்டும் தேர்தல் வாயிலாக, நிர்வாகிகளை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. திருப்பூர் சைமா சங்கத்தின் நிர்வாகக்குழு தேர்தல் அறிவிக்கப்பட்டு, தலைவர், பொதுசெயலாளர், பொருளாளர், துணை தலைவர் மற்றும் இரண்டு இணை செயலாளர்கள், 21 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த, 18, 19ம் தேதிகளில், வேட்புமனு தாக்கல் துவங்கியது; அதில், முக்கிய நிர்வாகிகள் பொறுப்புக்கு, தலா ஒருவர் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
''நிர்வாக குழு தேர்தலில் ஒவ்வொரு பதவிக்கும் தலா ஒருவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்ததால் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'சைமா' தலைவராக சண்முகசுந்தரம், பொது செயலாளராக தாமோதரன், பொருளாளராக சுரேஷ்குமார், துணைத் தலைவராக பாலசந்தர், இணை செயலாளராக பொன்னுசாமி, தனபால் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளனர்,'' என, தேர்தல் நடத்தும் அலுவலரான வக்கீல் ராமமூர்த்தி தெரிவித்தார்.