ADDED : பிப் 12, 2024 12:53 AM
திருப்பூர், தென்னம்பாளையம், மீன்மார்க்கெட்டுக்கு நேற்று, 50 டன் மீன்கள் விற்பனைக்கு வந்தது. மத்தி, கிலோ 160, அயிலை, 200 வஞ்சிரம், 750 - 850, பாறை, 150 - 500, படையப்பா, 300, கிழங்கா, 200, நண்டு, 400 ரூபாய்க்கு விற்றது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் மீன் விலை அதே நிலையில் தொடர்ந்தது.
'தை மாத கடைசி முகூர்த்தம், தை அமாவாசை நிறைவு என்பதால், எதிர்பார்த்த மீன் விற்பனை இல்லை. மொத்தமாக வாங்கி செல்லும் வியாபாரிகள் குறைந்தளவே மீன் வாங்கிச் சென்றனர். சில்லறை விற்பனையும் முந்தைய வாரத்தை விட நடப்பு வாரம் கொஞ்சம் குறைவு தான்' என்கின்றனர் மீன் வியாபாரிகள்.