/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பள்ளி ஆண்டு விழா மாணவர்களுக்கு பரிசு பள்ளி ஆண்டு விழா மாணவர்களுக்கு பரிசு
பள்ளி ஆண்டு விழா மாணவர்களுக்கு பரிசு
பள்ளி ஆண்டு விழா மாணவர்களுக்கு பரிசு
பள்ளி ஆண்டு விழா மாணவர்களுக்கு பரிசு
ADDED : மார் 17, 2025 09:33 PM

உடுமலை : சங்கரராமநல்லுார் பேரூராட்சி, குப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. இப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவிற்கு தலைமையாசிரியர் பொன்னுத்தாய் தலைமை வகித்தார். சங்கரராமநல்லுார் பேரூராட்சி தலைவர் மல்லிகா, துணைத் தலைவர் பிரேமலதா முன்னிலை வகித்தனர்.
மாணவர்களுக்கு ஆண்டுவிழாவையொட்டி நடனப்போட்டி, கோலப்போட்டி, பாட்டு மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் நந்தினி, குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.