/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சக்தி விக்னேஷ்வரா பள்ளி என்.எஸ்.எஸ். தின விழா சக்தி விக்னேஷ்வரா பள்ளி என்.எஸ்.எஸ். தின விழா
சக்தி விக்னேஷ்வரா பள்ளி என்.எஸ்.எஸ். தின விழா
சக்தி விக்னேஷ்வரா பள்ளி என்.எஸ்.எஸ். தின விழா
சக்தி விக்னேஷ்வரா பள்ளி என்.எஸ்.எஸ். தின விழா
ADDED : செப் 25, 2025 12:21 AM

திருப்பூர்: பொங்குபாளையம் சக்தி விக்னேஸ்வரா கல்வி நிலையத்தில் என்.எஸ்.எஸ்., தினம் கொண்டாடப்பட்டது.
திருப்பூர் அருகே பொங்குபாளையத்தில் உள்ள சக்தி விக்னேஸ்வரா கல்வி நிலையத்தில், 56வது என்.எஸ்.எஸ்., தினத்தை பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் சிறப்பாக கொண்டாடினர். பள்ளி முதல்வர் சக்தி வேலுசாமி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் மரக்கன்று நட்டு விழாவை துவக்கி வைத்தார். புகையிலை, நெகிழி ஆகியவற்றின் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும். பாதுகாப்பாக பயணம், சுற்றுசூழல் பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டன. நாட்டு நலப்பணித் திட்டம் மாணவர்கள் நலமான பாரதத்தை உருவாக்குவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.