/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ துப்பாக்கி சுடுதல் போட்டி; குமுதா பள்ளி அசத்தல் துப்பாக்கி சுடுதல் போட்டி; குமுதா பள்ளி அசத்தல்
துப்பாக்கி சுடுதல் போட்டி; குமுதா பள்ளி அசத்தல்
துப்பாக்கி சுடுதல் போட்டி; குமுதா பள்ளி அசத்தல்
துப்பாக்கி சுடுதல் போட்டி; குமுதா பள்ளி அசத்தல்
ADDED : செப் 23, 2025 11:59 PM

திருப்பூர்; சென்னை துப்பாக்கி சுடுதல் கழக சார்பில், 50வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்தது. இதில், 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில், குமுதா பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் ரிஷிக் ஆர்யா, 324 புள்ளிகள் பெற்று, பெண்கள் பிரிவில் பிளஸ் 1 மாணவி ரிதன்யா, 300 புள்ளிகள் பெற்று அசத்தினர்.
இப்போட்டி வாயிலாக, தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியிலும்,தென்னிந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் பங்கேற்க உள்ளனர். துப்பாக்கி சுடும் போட்டியில் அசத்திய மாணவர்களை பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி, விளையாட்டு இயக்குநர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா உட்பட பலரும் பராட்டினர்.