Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சிறப்பு கல்விக்கடன் முகாம் வரும் 14ம் தேதி நடக்கிறது

சிறப்பு கல்விக்கடன் முகாம் வரும் 14ம் தேதி நடக்கிறது

சிறப்பு கல்விக்கடன் முகாம் வரும் 14ம் தேதி நடக்கிறது

சிறப்பு கல்விக்கடன் முகாம் வரும் 14ம் தேதி நடக்கிறது

ADDED : அக் 08, 2025 11:10 PM


Google News
உடுமலை,; திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த மாணவ, மாணவியர் கல்விக்கடன் பெறுவதற்கான, சிறப்பு கல்விக்கடன் முகாம், அக்.,14ம் தேதி, திருப்பூர், தாராபுரம் ரோடு, ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் காலை, 10.00 மணி முதல் மாலை, 4.00 மணி வரை நடக்கிறது.

மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகள் பங்கேற்க உள்ளன.

கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.pmvidyalaxmi.co.in என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, முகாம் நடைபெறும் நாளன்று, விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

விண்ணப்ப நகல், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல், ஆண்டு வருமானச் சான்று நகல், ஜாதிச் சான்று நகல், பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்விக் கட்டண விபரம் கொண்டு வரவேண்டும்.

அத்துடன், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் இளநிலை பட்டப் படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு வாயிலாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை போன்ற ஆவணங் களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

இதில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் கலந்து கொண்டு, மாணவர்களின் விண்ணப்பங்களைப் பெற்று கல்விக் கடன் வழங்க, மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறும், மேலும் விபரங்களுக்கு, 042- 1-2971185 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us