Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உயர் கல்வி தொடராத 512 மாணவர்கள் கல்லுாரியில் இணைக்க நடவடிக்கை

உயர் கல்வி தொடராத 512 மாணவர்கள் கல்லுாரியில் இணைக்க நடவடிக்கை

உயர் கல்வி தொடராத 512 மாணவர்கள் கல்லுாரியில் இணைக்க நடவடிக்கை

உயர் கல்வி தொடராத 512 மாணவர்கள் கல்லுாரியில் இணைக்க நடவடிக்கை

ADDED : செப் 23, 2025 11:54 PM


Google News
திருப்பூர்; உயர்கல்வியில் சேராத, 512 மாணவர்களை, கல்லுாரியில் சேர்த்து, உயர்கல்வியை தொடரச் செய்யவேண்டும் என, ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தினார்.

திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிமுத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜூ, அருள்ஜோதி, மணிமாறன் உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை உள்பட பள்ளி கல்வி அதிகாரிகள் பங்கேற்றனர்.

உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, பள்ளி மேலாண்மை குழு, பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், உண்டு, உறைவிட பள்ளி செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார்.

ஆய்வுக்குப்பின் கலெக்டர் பேசுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில் உயர் கல்வியில் சேராத, 512 மாணவர்கள் உள்ளனர். இதற்கான காரணங்களை கண்டறிந்து, அம்மாணவர்களை கல்லுாரியில் சேர்த்து, உயர்கல்வியை தொடரச் செய்ய கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிராம நுாலகங்களில் உள்ள புத்தகங்களை மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்கவேண்டும். பள்ளி மேலாண்மை குழு மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், துறை சார்ந்த தேவைகளை நிவர்த்தி செய்ய, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து, மின்வாரியத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றார்.

விபத்தில் பெற்றோரை இழந்தவர்கள், நிரந்தர உடல் பாதிப்பு ஏற்பட்டதால் பாதிக்கப்படுகின்ற தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர், 28 பேருக்கு வைப்பு நிதிக்கான பத்திரங்கள் வழங்கப்பட்டன.

நுாற்றாண்டு கடந்த துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல் நிலை மொத்தம், 58 பள்ளிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us