/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ காத்திருக்கும் சவால்! தேங்கும் பாலியஸ்டர் துணி கழிவு; தீர்வு கண்டறிவது மிகமிக அவசியம் காத்திருக்கும் சவால்! தேங்கும் பாலியஸ்டர் துணி கழிவு; தீர்வு கண்டறிவது மிகமிக அவசியம்
காத்திருக்கும் சவால்! தேங்கும் பாலியஸ்டர் துணி கழிவு; தீர்வு கண்டறிவது மிகமிக அவசியம்
காத்திருக்கும் சவால்! தேங்கும் பாலியஸ்டர் துணி கழிவு; தீர்வு கண்டறிவது மிகமிக அவசியம்
காத்திருக்கும் சவால்! தேங்கும் பாலியஸ்டர் துணி கழிவு; தீர்வு கண்டறிவது மிகமிக அவசியம்

குப்பையாக மாறுகிறது
குறு, சிறு யூனிட்டுகள், இரவு நேரத்தில் 'கட்டிங் வேஸ்ட்' மூட்டைகளை எடுத்துச்சென்று, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில், ரோட்டோரமாக வீசிவிடுகின்றனர். சில நாட்களுக்கு பிறகு, அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் தீ வைத்து எரிக்கின்றனர். இதேபோல், திருப்பர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில், பாலியஸ்டர் செயற்கை நுாலிழையில் தயாரித்த 'கட்டிங் வேஸ்ட்'கள், அதிக அளவு தேக்கமடைந்துள்ளன.
எல்லாமே காசு தானுங்க!
பருத்தி, பருத்தி மற்றும் விஸ்கோஸ், பருத்தி மற்றும் பாலியஸ்டர் என, பல்வேறு வகையான துணியை வாங்கி ஆடை தைக்கின்றனர். கழிவுகளும், அனைத்து ரகங்களும் கலந்து இருக்கின்றன. பாலியஸ்டர் துணியை தனியாக அரைத்தால், மெஷின் சூடாகும்; பருத்தி துணி கழிவுடன் சேர்த்து அரைக்கலாம். அனைத்து ரக கட்டிங் வேஸ்ட்களுக்கும், காசு கிடைக்கும். கிலோ, 10 ரூபாய் முதல், 110 ரூபாய் வரை 'கட்டிங் வேஸ்ட்' விற்கப்படுகிறது. எனவே, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியாளர், 'கட்டிங் வேஸ்ட்'களையும் காசாக்க முடியும்.


