Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ முதல் கோணம் முற்றும் கோணல்! 'டாஸ்மாக்' பார்கள் ஏலம்: ஆரம்பமே குழப்பம்

முதல் கோணம் முற்றும் கோணல்! 'டாஸ்மாக்' பார்கள் ஏலம்: ஆரம்பமே குழப்பம்

முதல் கோணம் முற்றும் கோணல்! 'டாஸ்மாக்' பார்கள் ஏலம்: ஆரம்பமே குழப்பம்

முதல் கோணம் முற்றும் கோணல்! 'டாஸ்மாக்' பார்கள் ஏலம்: ஆரம்பமே குழப்பம்

ADDED : மே 26, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
திருப்பூர் : திருப்பூர் மாவட்த்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை பார்களுக்கு ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கோளாறு காரணமாக, முதல் நாளே டெண்டர் படிவம் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில், 240 மதுக்கடைகள் உள்ளன. இவற்றில் அமைந்துள்ள 'பார்'கள் பல தரப்புக்கும் பணம் கொழிக்கும் வளமான வருவாய் இனமாக உள்ளது. ஆண்டு தோறும் இந்த பார் நடத்தும் உரிமத்துக்கான ஏலம் கடுமையான கட்டுப்பாடுகளுடனும், பலத்த போலீஸ் பாதுகாப்புடனும் நடத்தப்படும். அரசியல் பெரும் புள்ளிகள், ஆளும் கட்சியினர், உயர் அரசு அதிகாரிகள், செல்வாக்கு மிக்க நபர்கள் ஆகியோரின் ஆதரவு இருந்தால் மட்டுமே இந்த பார் உரிமங்கள் பெறும் நிலை காலம் காலமாகவே நீடித்து வருகிறது.

இந்நிலையில், தற்போது பார் உரிமத்துக்கு ஆன்லைன் வாயிலாக டெண்டர் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கடை பார்கள் உரிமத்துக்கான டெண்டர் அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில், 26ம் தேதி காலை 10:30 மணி முதல், வரும் 10ம் தேதி காலை 10:00 மணி வரை ஆன்லைன் வாயிலாக டெண்டர் படிவங்கள் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது வரை, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் நடந்த பார் ஏலம் தற்போது, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு, டெண்டர் கோரியவர்கள் மட்டும் பங்கேற்கலாம் எனவும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நேற்று பார் ஏலத்தில் பங்கேற்க விரும்பியவர்கள், இணையதளம் வாயிலாக படிவங்களை பதிவிறக்கம் செய்ய முயன்றனர். ஆனால், இணைய தளம் இயங்கவில்லை. இதனால், பார் ஏல நடைமுறை முதல் கட்ட நடவடிக்கையிலேயே ஆட்டம் காணும் நிலையில் உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us