/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஒதுக்கிய பொருட்களிலும் ஒளிந்திருக்கும் அழகுஒதுக்கிய பொருட்களிலும் ஒளிந்திருக்கும் அழகு
ஒதுக்கிய பொருட்களிலும் ஒளிந்திருக்கும் அழகு
ஒதுக்கிய பொருட்களிலும் ஒளிந்திருக்கும் அழகு
ஒதுக்கிய பொருட்களிலும் ஒளிந்திருக்கும் அழகு
ADDED : பிப் 25, 2024 12:33 AM

திருப்பூர், பி.என்., ரோடு, கூத்தம்பாளையம் பிரிவு, முருகு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், அறி வியல் கண்காட்சி நடந்தது. பல்வேறு தலைப்புகளில் தொடர்புடைய பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர் மாணவ, மாணவியர்.
ஏழாம் வகுப்பு மாணவி, பிருத்திகாஹரிணி, ஜூஸ், இளநீர் குடித்து விட்டு நாம் துாக்கியெறியும், ஸ்ட்ராக்களை அழகாக வெட்டி, அதில் ஊஞ்சல், அழகான இருக்கை, வீட்டு அலமாரி வடிவமைத்திருந்தார்.
காபி, டீ குடித்து விட்டு துாக்கியெறியும் ஒன் யூஸ் டம்ளர் களை டேபிள், சேர் வடிவில் வெட்டி, அதில் டைனிங் டேபிள், டிரஸ்சிங் டேபிள் நுணுக்க மாக வடிவமைத்திருந்தார்.
மற்றொரு, ஏழாம் வகுப்பு மாணவி, சாராஸ்ரீ, அட்டைப்பெட்டிகளை அழகாக வெட்டி, அதில் கிணறு செய்ததுடன், அந்த கிணற்றில் தண்ணீர் நிரப்பி, எப்படி அந்த காலத்தில் தண்ணீர் ஊறும் வரை காத்திருந்தனர், இன்று அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, தண்ணீரை, கிணற்றில் இருந்து இறைக்கும் முறையை காட்சிப்படுத்தியதோடு, செயல் விளக்கமும் அளித்தார்.
இதுதவிர, மரத்துண்டுகளை மிக நுணுக்கமாக வெட்டி, மாட்டு வண்டி, குதிரை வண்டி மட்டுமல்ல... மாடு, குதிரை உருவங்களையும் அப்படியே தத்ரூபமாக செய்திருந்தார்.
தேங்காய் சிரட்டையில் வண்ணங்களை தீட்டி, அதில் நாம் தினசரி மொபைல் போனில் பயன்படுத்தும் சிரிப்பு, வியப்பு, கோபம் உள்ளிட்ட 'ஸ்மைலி'க்களை வியப்புற வரைந்திருந்தார்.
'வீட்டில் வீணாக நாம் துாக்கியெறியும் பொருட்களை சற்று யோசித்து, முயற்சித்தால் பயனுள்ள பொருளாக மாற்றி, நாம் வீட்டின் அழகு பொருளாக மாற்றி விட முடியும்.
நேரமும், வாய்ப்பும் நாமே உருவாக்கிக் கொள்வது தான்,' என, இருவரும் பார்வையாளர்களுக்கு அற்புதமான விளக்கமும் அளித்து, பாராட்டு பெற்றனர்.