Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 24 மணி நேரமும் கரைபுரளும் மது 'ஆறு'; பாட்டிலுக்கு கூடுதலாக நுாறு ரூபாய் வசூல்.. தடுமாற்றத்தில் 'உழைப்பாளிகள் நகரம்'

24 மணி நேரமும் கரைபுரளும் மது 'ஆறு'; பாட்டிலுக்கு கூடுதலாக நுாறு ரூபாய் வசூல்.. தடுமாற்றத்தில் 'உழைப்பாளிகள் நகரம்'

24 மணி நேரமும் கரைபுரளும் மது 'ஆறு'; பாட்டிலுக்கு கூடுதலாக நுாறு ரூபாய் வசூல்.. தடுமாற்றத்தில் 'உழைப்பாளிகள் நகரம்'

24 மணி நேரமும் கரைபுரளும் மது 'ஆறு'; பாட்டிலுக்கு கூடுதலாக நுாறு ரூபாய் வசூல்.. தடுமாற்றத்தில் 'உழைப்பாளிகள் நகரம்'

ADDED : ஜூன் 17, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்; நாட்டின் பின்னலாடை தலைநகராக திகழும் திருப்பூரில் உழைப்பாளிகளின் ரத்தத்தை உறிஞ்சிக்குடிக்கும், மது அரக்கனால், பல குடும்பங்கள் தெருவுக்கு வந்து விட்டன. போதைப்பழக்கத்தால் கொடுங்குற்றங்களும் அரங்கேறுகின்றன. மது விற்பனை, 24 மணி நேரமும் நடப்பது வேதனையின் உச்சம்.

திருப்பூர் மாவட்டத்தில், நகரில், 90 புறநகரில், 139 என, மொத்தம், 229 'டாஸ்மாக்' மதுக்கடைகள் உள்ளன. காலை, 12:00 முதல், இரவு 10:00 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்பது அரசு உத்தரவு. ஆனால் கடையையொட்டி, உள்ள சிறிய கடையில் இருந்து 'பார்'களுக்குள்ளும், புறநகரில் காட்டுப்பகுதி உள்பட ஏதாவது ஒரு இடத்திலும் பதுக்கி வைத்து விடியவிடிய, 24 மணி நேரமும் மது விற்பனை தாராளமாக நடக்கிறது.

'சில்லிங்' மது விற்பனையில், குவாட்டர், பீர் ஆகியவை பாட்டிலுக்கு, 100 ரூபாய் வரை அதிகமாக வைத்து விற்று நன்றாக 'கல்லா' கட்டுகின்றனர். புகார்கள் வந்தால் பெயரளவுக்கு நடவடிக்கை எடுக்கின்றனர். இதனால், வழக்கம்போல், 24 மணி நேரமும் மது விற்பனை நீடிக்கிறது.

'அடங்காத' பார்கள்

மாவட்டத்தில், 165 மதுக்கடை 'பார்'களுக்கு மட்டுமே உரிய அனுமதி உள்ளது. மீதமுள்ளவை சட்டவிரோதமாக ஆளும்கட்சியினர் ஆசியோடு 'ஜாம் ஜாம்' என்று நடக்கிறது. புகார் சென்றாலும், பெயரளவுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்து மூடி செல்கின்றனர். சில நாட்களுக்குள் 'சீல்' உடைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்படுகிறது. பார்களில் சட்டவிரோத கும்பல்கள் பல்வேறு குற்ற செயல்களை திட்டமிடுவது, கஞ்சா, குட்கா, லாட்டரி போன்றவற்றை தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. மாதந்தோறும் 'சிறப்பு கவனிப்பு' நடப்பதால், போலீசார் கண்டுகொள்வதில்லை.

சட்டவிரோத மதுவிற்பனை தொடர்பாக 'டாஸ்மாக்' அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. விற்பனையை அதிகரிக்க, கடைகளில் பொய்யான விற்பனை காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. எப்.எல்., 2 பார்களில் விற்பனை செய்வதாக காட்டப்பட்டு, கடை ஊழியர் வாயிலாக, கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்கப்படுகிறது.

சீரழியும் குடும்பங்கள்


தாராள மது விற்பனையால், இளைஞர்கள், தொழிலாளர்கள் வேலைகளுக்கு சரியாக செல்லாமல், தங்கள் சம்பளத்தை வீட்டுக்கு கொடுக்காமல் அடிமையாகி வருகின்றனர். குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. தொழிலாளர்களை நம்பியுள்ள நிறுவனங்களும் சிரமப்படுகிறது. மதுவால் அன்றாடம் போதையில் தகராறு, வழிப்பறி போன்ற குற்றங்களும் நடக்கிறது.

இதைத் தடுக்க வேண்டிய போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு இயந்திரம் முடங்கிக்கிடக்கிறது. மாமூல் வசூலில் அதிகார வர்க்கம் திளைக்கிறது. இதனால், தொழிலாளர் உற்பத்தித்திறனில் துவங்கி, திருப்பூரில் சமூகச்சீரழிவுகள் கொடிகட்டிப் பறக்கிறது.

சிறு தகராறில் துவங்கி... கொலை வரை


திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் வளாகத்தில், வழிப்பறிகளில் ஈடுபடும் சில பெண்கள், ஆண் பயணிகளை நோட்டமிட்டு நைசாக பேசி அருகே உள்ள மதுக்கடை பார்களுக்கு அழைத்து சென்று மது அருந்த வைக்கின்றனர். அதன்பின், போதையில் உள்ள பயணிகளின் உடமைகளை பறித்து செல்கின்றனர்.
சில மாதம் முன், அவிநாசியில் தோட்டத்தில் ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் போதையில் மூத்த தம்பதியை ஒருவர் கொலை செய்தார். மறுநாள் போலீசார் விசாரிப்பதை அறிந்து, தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டு போதையில் டூவீலரில் சென்று விபத்து ஏற்படுத்தினர். ஆனால், காயத்துடன் போலீசாரிடம் சிக்கினார்.
அவிநாசியில், பைனான்ஸியர் ஒருவர் வாக்கிங் சென்ற போது, காரில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டி சாய்த்தது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரித்த போது, கை, கால்களை மட்டும் வெட்ட அறிவுறுத்தி அனுப்பிய நபர்கள், மதுபோதையில் சரமாரியாக வெட்டி சாய்த்தது தெரிந்தது.
சில நேரங்களில் கட்டுக்கடங்காத போதை தகராறில் ஆரம்பித்து, கொலையில் முடிந்து விடுகிறது. இரு மாதத்துக்கு முன், போதை கும்பல் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தகராறில் தந்தை, மகனை அரிவாளால் வெட்டியது நடந்தது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us