Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நடவடிக்கை ஏதுமில்லை மக்கள் காத்திருப்பு போராட்டம்

நடவடிக்கை ஏதுமில்லை மக்கள் காத்திருப்பு போராட்டம்

நடவடிக்கை ஏதுமில்லை மக்கள் காத்திருப்பு போராட்டம்

நடவடிக்கை ஏதுமில்லை மக்கள் காத்திருப்பு போராட்டம்

ADDED : ஜன 26, 2024 11:59 PM


Google News
Latest Tamil News
பல்லடம்: பல்லடம், சுக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன் கிராம மக்கள் நேற்று, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் கூறியதாவது:

சுக்கம்பாளையம் ஊராட்சியில், சாலைகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் உள்ளன. எனவே, புதிய சாலை அமைத்தும், மோசமாக உள்ளதை சீரமைக்க வேண்டும்.

சின்ன அம்மன் கோவில் முதல் உடையங்காடு பாலம் வரை, 3 இன்ச் குழாயாக மாற்றி அமைக்க வேண்டும். கிராம சாலைகள் வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்றஅறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, 2023 ஆக., 15ல் நடந்த கிராமசபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போது, குடியரசு தினம் வந்தும் தீர்வு காணப்படவில்லை. கோரிக்கைகள் நிறைவேறாமல், காத்திருப்பு போராட்டத்தை கைவிட மாட்டோம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியதால், போராட்டம் கைவிடப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us