/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ என்று தீரும் இந்த 'குப்பை' பிரச்னை; இந்திய கம்யூ., எச்சரிக்கை என்று தீரும் இந்த 'குப்பை' பிரச்னை; இந்திய கம்யூ., எச்சரிக்கை
என்று தீரும் இந்த 'குப்பை' பிரச்னை; இந்திய கம்யூ., எச்சரிக்கை
என்று தீரும் இந்த 'குப்பை' பிரச்னை; இந்திய கம்யூ., எச்சரிக்கை
என்று தீரும் இந்த 'குப்பை' பிரச்னை; இந்திய கம்யூ., எச்சரிக்கை
ADDED : செப் 24, 2025 12:22 AM
திருப்பூர்; ஊரக பகுதிகளில் குப்பை கொட்டுவதை நிறுத்தாவிட்டால், மாநகராட்சியை முற்றுகையிடுவோம் என, இந்திய கம்யூ. கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர் ஒன்றிய இந்திய கம்யூ., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், ஒன்றியகுழு உறுப்பினர் பழனிசாமி தலைமையில் நடந்தது. புறநகர் மாவட்ட பொருளாளர் பழனிசாமி,நிர்வாக குழு உறுப்பினர் முத்துசாமி முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய செயலாளர் பன்னீர் செல்வம் வரவேற்றார். இக்கூட்டத்தில், மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் சேகரமாகும் குப்பை கழிவுகள், திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் கொண்டு சென்று கொட்டப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதுபோன்ற செயலால், ஊராட்சி பகுதிகளில் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. கால்நடைகள் தீவனமாக இவற்றை உட்கொண்டு பாதிப்படைகிறது. ஊராட்சி பகுதிகளில் குப்பை கொட்டுவதைக் கைவிட்டு, மாநகராட்சி நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
மீறி தொடர்ந்தால், பொதுமக்களைத் திரட்டி, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். போராட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று முடிவு செய்து தீர்மானம் நிைவேற்றப்பட்டது. பொருளாளர் கோபிநாத் நன்றி கூறினார்.