/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கதரின் தலைநகரம் திருப்பூர்; அன்றே புகழாரம் சூட்டிய காந்திஜி கதரின் தலைநகரம் திருப்பூர்; அன்றே புகழாரம் சூட்டிய காந்திஜி
கதரின் தலைநகரம் திருப்பூர்; அன்றே புகழாரம் சூட்டிய காந்திஜி
கதரின் தலைநகரம் திருப்பூர்; அன்றே புகழாரம் சூட்டிய காந்திஜி
கதரின் தலைநகரம் திருப்பூர்; அன்றே புகழாரம் சூட்டிய காந்திஜி

குமரன் இறந்த இடத்தில் அஞ்சலி
கடந்த, 1934 பிப். 6ல் திருப்பூர் வந்த காந்தி, திருப்பூர் குமரன் அடிபட்டு இறந்த இடத்தில் அஞ்சலி செலுத்தினார். பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில், மக்கள் வழங்கிய நிதி அவரிடம் வழங்கப்பட்டது. சிலர் விலையுயர்ந்த பொருட்களை நிதியாக வழங்கினர். திருப்பூரை 'இந்தியாவின் லாங்க்ஷ்யர்' எனக்கூறி பெருமைப்படுத்தினார். ஊக்குவிக்கும் சக்தியாக, பி.டி.ஆஷர் தம்பதியினர் விளங்கினர். அதனால் தான், அகில இந்திய மகிளா காங், பொருளாளராக பத்மாவதி ஆஷரை, காந்தியடிகள் நியமித்தார்.
நகைகளை வழங்கிய சுந்தராம்பாள்
கடந்த, 1927 ஜூலை, 22ல், தன் துணைவியார் கஸ்துாரிபாவுடன் திருப்பூர் வந்த காந்தி, மங்கள விலாஸ் மாளிகையில் தங்கினார். மறுநாள் அதிகாலை நகராட்சிப்பள்ளி மாணவர்களுக்கு பகவத் கீதை வகுப்பு துவக்கி வைத்தார். பின், தற்போதைய டவுன் ஹால், அப்போதைய ரேடியோ மைதான பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அந்த கூட்டத்தில் தான், வீரபாண்டியை சேர்ந்த சுந்தராம்பாள், தன் அணிந்திருந்த நகைகளை, சுதந்திர போராட்ட நிதிக்காக வழங்கினார்.


