Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசு கல்லுாரியில் பட்டப்படிப்பு விண்ணப்பிக்க இன்று கடைசி

அரசு கல்லுாரியில் பட்டப்படிப்பு விண்ணப்பிக்க இன்று கடைசி

அரசு கல்லுாரியில் பட்டப்படிப்பு விண்ணப்பிக்க இன்று கடைசி

அரசு கல்லுாரியில் பட்டப்படிப்பு விண்ணப்பிக்க இன்று கடைசி

ADDED : மே 26, 2025 11:39 PM


Google News
திருப்பூர்,; கடந்த, 8ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகியது. ஒரு நாள் முன்னதாக, 7ம் தேதி முதல், அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் இளங்கலை பட்டப்படிப்புக்கு மாணவ, மாணவியருக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. பெயர், கல்வித்தகுதி, இ மெயில், மொபைல்எண் உள்ளிட்ட விபரங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் உள்ளீடு செய்து பலரும் விண்ணப்பித்து வந்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் எல்.ஆர்.ஜி., பெண்கள் கல்லுாரி, சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, அவிநாசி, தாராபுரம், காங்கயம், உடுமலை, பல்லடம் ஆகிய அரசு கலைக்கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டு, மாணவ, மாணவியர், பெற்றோருக்கு இளங்கலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், உயர்கல்வித்துறையின் முந்தைய அறிவிப்பின்படி, இன்று (27ம் தேதி) மாலை, 4:00 மணியுடன் இளங்கலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பபதிவு முடிவடைகிறது. கல்லுாரியில் இணைய இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பபதிவுக்கு பின் ரேங்கிங் பட்டியல், தரவரிசை தயாரிப்பு பணி முடிந்து, ஜூன் முதல் வாரம் கவுன்சிலிங் துவங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us