/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மே மாதம் உழவர் சந்தைகளில் ரூ.11 கோடி காய்கறி விற்பனை மே மாதம் உழவர் சந்தைகளில் ரூ.11 கோடி காய்கறி விற்பனை
மே மாதம் உழவர் சந்தைகளில் ரூ.11 கோடி காய்கறி விற்பனை
மே மாதம் உழவர் சந்தைகளில் ரூ.11 கோடி காய்கறி விற்பனை
மே மாதம் உழவர் சந்தைகளில் ரூ.11 கோடி காய்கறி விற்பனை
லாபம் இல்லையே!
முந்தைய மாதத்தோடு ஒப்பிடுகையில் உழவர் சந்தைக்கான காய்கறி வரத்து உயர்ந்துள்ளது. அதே நேரம், எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. 50 நாட்களுக்கு மேலாக தக்காளி விலை கிலோ, 15 - 25 என்ற நிலையிலே தொடர்கிறது. அவரை, பீன்ஸ் தவிர பெரும்பாலான காய்கறிகளின் விலை கிலோ, 50 ரூபாயை தாண்டவில்லை.அக்னி நட்சத்திரம், கோடை வெயில் தாக்கத்தால், உயருமென எதிர்பார்க்கப்பட்ட எலுமிச்சை விலை அப்படியே தலைகீழாக மாறி, கிலோ, 110 ரூபாய்க்கு வந்து விட்டது. பீர்க்கன், பாகற்காய், கிலோ, 50 ரூபாய்க்கு விற்று ஆறுதல் தந்தாலும், சுரைக்காய், புடலங்காய், முள்ளங்கி, முட்டைக்கோஸ், மேராக்காய் விலை உயரவில்லை. கடந்த மாதத்தை விடவும், வெங்காயம், உருளைக் கிழங்கு விலையும் குறைந்து விட்டதால், லாபம் இல்லை. வர்த்தகம் நடந்துள்ளது; எங்களுக்கு எதிர்பார்த்த லாபம் இல்லை. பள்ளி, கல்லுாரி திறப்பால் வர்த்தகம் அதிகரித்தால், விலை உயரும் என எதிர்பார்த்துள்ளோம்.