/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சமூக விரோதக் கூடாரமாக நடை மேம்பாலம்; பேனர் மறைத்ததால் அரங்கேறிய கொடூரம்.. பதைபதைக்குதே நெஞ்சம்!சமூக விரோதக் கூடாரமாக நடை மேம்பாலம்; பேனர் மறைத்ததால் அரங்கேறிய கொடூரம்.. பதைபதைக்குதே நெஞ்சம்!
சமூக விரோதக் கூடாரமாக நடை மேம்பாலம்; பேனர் மறைத்ததால் அரங்கேறிய கொடூரம்.. பதைபதைக்குதே நெஞ்சம்!
சமூக விரோதக் கூடாரமாக நடை மேம்பாலம்; பேனர் மறைத்ததால் அரங்கேறிய கொடூரம்.. பதைபதைக்குதே நெஞ்சம்!
சமூக விரோதக் கூடாரமாக நடை மேம்பாலம்; பேனர் மறைத்ததால் அரங்கேறிய கொடூரம்.. பதைபதைக்குதே நெஞ்சம்!

தவிர்க்கும் மக்கள்
இதன் காரணமாக, மாநகராட்சி சார்பில், புஷ்பா சந்திப்பு, பார்க் ரோடு, டவுன்ஹால், ரயில்வே ஸ்டேஷன், நல்லுார் போன்ற இடங்களில் பாதசாரிகள் ரோட்டை கடந்து செல்ல நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் மக்கள் ஆர்வம் காட்டாத நிலையில், சிலர் நடை மேம்பாலத்தை பயன்படுத்த துவங்கினர். ஆனால், இரவு நேரங்களில் 'குடி'மகன்கள் மது அருந்துவது, போதையில் துாங்குவது போன்ற செயல்களால் தவிர்க்க ஆரம்பித்தனர்.
பெண்ணிடம் அத்துமீறல்
பார்க் ரோட்டில் உள்ள நடைமேம்பாலத்தில் நேற்று முன்தினம் ரோட்டோரம் வசித்து வரும், 35 வயது பெண்ணை, சிலர் மதுபோதையில் அழைத்து கொண்டு மேலே சென்றுள்ளனர். அங்கு ஏற்பட்ட பிரச்னையில், பெண்ணை தாக்கியும், அத்துமீறலில் ஈடுபடவும் முயன்றனர். இதை பார்த்த, பாலத்தில் துாங்கி கொண்டிருந்த முதியவர் தட்டி கேட்டார். அவரையும் தாக்கியுள்ளனர்.
பேனரை அகற்றலாமே...!
சமீப காலமாக நடை மேம்பாலத்தை விளம்பர பேனர்கள் ஆக்கிரமித்து கொள்வதால், மேம்பாலத்தை பயன்படுத்த மக்கள் பெரும் அச்சப்பட்டு வருகின்றனர். தனியாக செல்லும் பெண்களை, போதை ஆசாமிகள் கிண்டல் செய்வது, சீண்ட முயற்சி செய்வது, இரவு நேரங்களில் வழிப்பறி போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.


