/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அத்திக்கடவு திட்டத்தில் நீர் செறிவூட்டும் பணி சிக்கல் அத்திக்கடவு திட்டத்தில் நீர் செறிவூட்டும் பணி சிக்கல்
அத்திக்கடவு திட்டத்தில் நீர் செறிவூட்டும் பணி சிக்கல்
அத்திக்கடவு திட்டத்தில் நீர் செறிவூட்டும் பணி சிக்கல்
அத்திக்கடவு திட்டத்தில் நீர் செறிவூட்டும் பணி சிக்கல்
ADDED : செப் 25, 2025 12:21 AM
திருப்பூர்: கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி, 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையில், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பவானி ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரில், ஆண்டுக்கு, 70 நாள், 1.5 டி.எம்.சி., நீர் பெறுவது தான், இத்திட்டத்தின் நோக்கம். இந்நிலையில், திட்டமிட்டபடி குளம், குட்டைகளுக்கு நீர் வினியோகம் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது என, விவசாயிகள் கூறி வருகின்றனர்.
இதுதொடர்பாக, நீர்வளத்துறை அதிகாரிகளிடம், அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் அளித்த மனு குறித்து கூறியதாவது:
அத்திக்கடவு திட்டத்தின் கீழ், 6 நீரேற்ற நிலையங்கள் வாயிலாக நீர் செறிவூட்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது. 6 நீரேற்ற நிலையங்களும் ஒரு நேரத்தில் இயங்கினால் தான், திட்டமிடப்படி, நீர் செறிவூட்டும் பணியை மேற்கொள்ள முடியும்.
மின் வினியோகம் மேற்கொள்ள 'செகண்டரி பவர் ஹவுஸ்' ஏற்படுத்தினால் தான் இது சாத்தியம். ஆனால், இதுவரை, அத்தகைய கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை.
தற்போதுள்ள மோட்டார் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மீண்டும் மின் இணைப்பு வரும் போது, நீர் சப்ளையாக, 6 மணி நேரம் தாமதமாகும். எனவே, மின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.