ADDED : மே 27, 2025 11:50 PM
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி அறிக்கை:
திருப்பூர் மாநகராட்சி, 4வது குடிநீர் திட்டம், மேட்டுப்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து, குடிநீர் குழாய் வாயிலாக கொண்டு வரப்பட்டு, மாநகர பகுதிகளில் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த, 23ம் தேதி, தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் சுத்திகரிப்பு மையத்திற்கு செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவமழை காரணமாக, பில்லுார் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் பவானி ஆற்றில் கலந்து சேறும், சகதியுமாக வருவதால், தற்போது நீரேற்றம் செய்ய முடியாத நிலையுள்ளது. இதனால், திருப்பூர் மாநகர பகுதிகளில் குடிநீர் வினியோகத்தில் காலதாமதம் ஏற்படும்.