Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பனியன் தொழிலை அடுத்த கட்டத்துக்கு உயர்த்துவோம்! 'சைமா' புதிய நிர்வாக குழுவினர் 'சபதம்'

பனியன் தொழிலை அடுத்த கட்டத்துக்கு உயர்த்துவோம்! 'சைமா' புதிய நிர்வாக குழுவினர் 'சபதம்'

பனியன் தொழிலை அடுத்த கட்டத்துக்கு உயர்த்துவோம்! 'சைமா' புதிய நிர்வாக குழுவினர் 'சபதம்'

பனியன் தொழிலை அடுத்த கட்டத்துக்கு உயர்த்துவோம்! 'சைமா' புதிய நிர்வாக குழுவினர் 'சபதம்'

ADDED : செப் 30, 2025 01:02 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்; திருப்பூரில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று மாலை 'சைமா' அலுவலக கூட்டரங்கில் நடந்தது.

விழாவில், பொது செயலாளர் கோவிந்தப்பன் வரவேற்றார். தலைவர் ஈஸ்வரன் 'சைமா' சங்கத்தின் வரலாறு, பனியன் தொழில் வளர்ச்சிக்கு செய்த சாதனைகள் விளக்கி பேசினார்.

தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். அவ்வகையில், 'சைமா' தலைவராக சண்முகசுந்தரம், துணை தலைவர் பாலசந்தர், பொது செயலாளர் தாமோதரன், பொருளாளர் சுரேஷ்குமார், இணை செயலாளர்கள் தனபால், பொன்னுசாமி மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், பொது செயலாளர் திருக்குமரன், இணை செயலாளர் குமார் துரைசாமி, 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி, செயலாளர் ராஜாமணி, சாய ஆலைகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன், செயலாளர் முருகசாமி, 'டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த், பவர்டேபிள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்.

விழாவில், 'சைமா' சங்க தலைவர் சண்முகசுந்தரம் பேசியதாவது:

திருப்பூர் பனியன் தொழிலை பாதுகாத்து வரும் சைமா சங்கத்தின் சட்ட திட்ட, விதிகளுக்கு உட்பட்டு புதிய நிர்வாகக் குழு செயல்படும். பின்னாலடை தொழிலை அடுத்த கட்டத்துக்கு உயர்த்த, திட்டமிட்டு செயல்படுவோம்.

சங்கத்தின் செயல்பாடுகளை செம்மைப்படுத்த, ஆலோசனை குழு, நிர்வாகக்குழு, சிறப்பு அழைப்பாளர் குழு, நடுவர் மன்ற குழு, திறன் மேம்பாட்டு குழு, இளம் சைமா குழு உட்பட, தலா மூன்று பேர் கொண்ட, 15 வகையான புதிய கமிட்டி உருவாக்கப்படும். தொழில் அமைப்பினர், தொழிலாளர்கள், இளம் தொழில்முனைவோர்களுடன் ஒருங் கிணைந்து செயல்படுவோம். திருப்பூரின் வளர்ச்சிக்காக 'சைமா' சங்கம், சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து வழங்கும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

தாய் சங்கம் 'சைமா'

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசுகையில், ''பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தி வருவது போல், ஒரு மாவட்டம், ஒரு தொழில் என்ற வகையில், பனியன் தொழிலுக்கு சிறப்பானது திருப்பூர் என்ற நற்பெயரை பெற்றுள்ளோம். தாய் சங்கமான சைமா சங்கத்தின் நிர்வாகிகளுடன் இணைந்து, தொழில் வளர்ச்சிக்கு ஒருங்கிணைந்து செயல்படுவோம்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us