Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ரயில்வே உட்கட்டமைப்பு ஆலோசனை கூட்டம் திருப்பூர், ஈரோடு எம்.பி.,க்கள் 'ஆப்சென்ட்' ஏன்?

ரயில்வே உட்கட்டமைப்பு ஆலோசனை கூட்டம் திருப்பூர், ஈரோடு எம்.பி.,க்கள் 'ஆப்சென்ட்' ஏன்?

ரயில்வே உட்கட்டமைப்பு ஆலோசனை கூட்டம் திருப்பூர், ஈரோடு எம்.பி.,க்கள் 'ஆப்சென்ட்' ஏன்?

ரயில்வே உட்கட்டமைப்பு ஆலோசனை கூட்டம் திருப்பூர், ஈரோடு எம்.பி.,க்கள் 'ஆப்சென்ட்' ஏன்?

ADDED : பிப் 29, 2024 11:15 PM


Google News
திருப்பூர்:சேலத்தில் ரயில்வே உள்கட்டமைப்பு தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில், திருப்பூர் மற்றும் ஈரோடு எம்.பி.,க்கள் பங்கேற்கவில்லை.

தெற்கு ரயில்வே, சேலம் கோட்டத்தில் நிறைவடைந்துள்ள முக்கிய உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணி குறித்து ஆலோசனை கூட்டம் சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நேற்று முன் தினம் நடந்தது. இதில், பங்கேற்க, எம்.பி.,க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

தெற்கு ரயில்வே தரப்பில் கூடுதல் பொது மேலாளர் ஸ்ரீ கவுஷல்கிஷோர், முதன்மை மேலாளர் ஸ்ரீ பங்கஜ்குமார் சின்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர். எம்.பி.,க்கள் நடராஜன் - கோவை, சின்னராஜ் - நாமக்கல், செந்தில்குமார் - தருமபுரி, செல்லக்குமார் - கிருஷ்ணகிரி, ராஜ்சபா எம்.பி., சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருப்பூர் எம்.பி., சுப்பராயன் - இந்திய கம்யூ., மற்றும் ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி - ம.தி.மு.க., ஆகியோர் பங்கேற்கவில்லை.

'கூட்டம் நடத்தி என்ன செய்யப்போறாங்க?'

கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து, திருப்பூர் எம்.பி., சுப்பராயனிடம் கேட்ட போது, ''நான் கூட்டத்துக்கு செல்லவில்லை. சென்னையில்இருந்தேன். ஏற்கனவே, கோரிக்கைகளை பலமுறை வழங்கியுள்ளேன். இப்போது கூட்டம் நடத்தி என்ன செய்ய போகிறார்கள். கொடுத்த மனுக்களுக்கே பதில் இல்லை,'' என்றார்.

'அத்திக்கடவு திட்ட ஆலோசனையில் பங்கேற்றேன்'

ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தியிடம் கேட்ட போது, ''கூட்டத்துக்கு வருவதாக ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தேன். ஈரோடு கலெக்டர் தமிழக அரசின் நலத்திட்ட உதவி வழங்கும் விழா, அத்திக்கடவு - அவிநாசி திட்ட நிலவரம் தொடர்பான ஆலோசனை கூட்டம் உட்பட மூன்று நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஈரோடில் கூட்டங்களில் பங்கேற்றதால், சேலம் ரயில்வே கூட்டத்துக்கு செல்ல இயலவில்லை,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us