Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்படுவாரா? மாநகராட்சி கமிஷனர் பணியிடம் காலி

ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்படுவாரா? மாநகராட்சி கமிஷனர் பணியிடம் காலி

ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்படுவாரா? மாநகராட்சி கமிஷனர் பணியிடம் காலி

ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்படுவாரா? மாநகராட்சி கமிஷனர் பணியிடம் காலி

ADDED : ஜூன் 02, 2025 06:20 AM


Google News
திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு முதன் முறையாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி கமிஷனராக நியமிக்கப்பட்டார். கிராந்திகுமார் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டு இரண்டாண்டு பணியாற்றினார். அவருக்கு அடுத்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி பவன்குமார் இங்கு கடந்த 2023ல் நியமிக்கப்பட்டார்.

கடந்த ஏழு மாதம் முன், பவன்குமார் கோவை கலெக்டராக மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக ராமமூர்த்தி திருப்பூர் மாநகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டார். கடந்த 31ம் தேதியுடன் அவர் பணி ஓய்வு பெற்ற நிலையில், கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளது.

பொறுப்பு கமிஷனராக, துணை கமிஷனர் மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் தான், திருப்பூருக்கு துணை கமிஷனராக இடமாறுதல் பெற்று வந்தார்.

ரூ.100 கோடி பணிகள்


திருப்பூர் மாநகராட்சியைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் பல நுாறு கோடி ரூபாய் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும், வளர்ந்து வரும் நகரம். நுாறு கோடி ரூபாய் வரை வரி வருவாய் ஈட்டும் முக்கியமான மாநகராட்சி. தற்போதைய மக்கள் தொகை 14 லட்சமாகவும், தினசரி வந்து செல்லும் மக்கள் எண்ணிக்கை 3 லட்சத்துக்கு மேலும் உள்ளது. மாநகராட்சி பகுதி விரிவாக்கம் செய்யும் திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினமும் பல்வேறு புதிய பணிகள் மேற்கொள்வதும், பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்வதும் நிர்வாகத்துக்கு சவால்களாக இருந்து வருகிறது.

நிர்வாகத்தை முடக்கும்


கமிஷனர் பணியிடத்துக்கு பொறுப்பு அலுவலர் நியமனம் என்பது நிர்வாகத்தை முடக்கும் நிலையை தான் ஏற்படுத்தும். புதிய கமிஷனர் நியமனம் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.இங்குள்ள சவால்கள் மற்றும் பிரச்னைகளை எதிர்கொள்ள, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்திலான அதிகாரிகளால் மட்டுமே இயலும்.

அரசியல் அழுத்தங்களுக்கு இடம் தராமலும், நிர்வாக ரீதியாக உரிய விதிமுறைகளை மீறாமலும், அரசு துறை உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் பெற்றுத்தருவது உள்ளிட்டவற்றுக்கும் ஏற்ப கமிஷனர் பணிக்கு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us