/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வேலை உறுதி திட்டத்தில் மாற்றம் அரசு கவனிக்குமா? வேலை உறுதி திட்டத்தில் மாற்றம் அரசு கவனிக்குமா?
வேலை உறுதி திட்டத்தில் மாற்றம் அரசு கவனிக்குமா?
வேலை உறுதி திட்டத்தில் மாற்றம் அரசு கவனிக்குமா?
வேலை உறுதி திட்டத்தில் மாற்றம் அரசு கவனிக்குமா?
ADDED : செப் 18, 2025 09:35 PM
உடுமலை; முக்கிய சாகுபடி சீசனில், நடவு, களையெடுத்தல் போன்ற விவசாய பணிகளுக்கும், வேலை உறுதி திட்ட பணியாளர்களை பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது; அமராவதி அணை ஆயக்கட்டு பகுதியிலும் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது.
நெல், மக்காச்சோளம், தானிய விதைப்பு மற்றும் காய்கறி சாகுபடி பணிகளை துவக்கியுள்ள விவசாயிகள், தொழிலாளர் பற்றாக்குறையால், தவித்து வருகின்றனர்.குறித்த நேரத்தில், நடவு, தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற பணிகளை செய்ய முடியாமல், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
விவசாயிகள் கூறியதாவது: பாசன சீசன் காலத்தில், தொழிலாளர் பற்றாக்குறையால், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில், சாகுபடி பணிகள் பாதிக்கிறது. தற்போது, வேலை உறுதி திட்டத்தில், ரோட்டோரத்தில் புதர்கள் அகற்றுதல் உள்ளிட்ட பணிகளே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால், விதை நடவு, களையெடுத்தல், கால்வாய் சீரமைப்பு போன்ற பணிகளுக்கு, வேலை உறுதி திட்ட பணியாளர்களை அனுமதிப்பதில்லை.
சீ சன் சமயத்தில், அனைத்து விவசாய பணிகளுக்கும், தொழிலாளர்களை அனுமதித்தால், விவசாயிகள், தொழிலாளர்கள் என இரு தரப்பினரும் பயன்பெறுவார்கள்.
அரசு நிதியும் வீணடிக்கப்படுவது தவிர்க்கப்படும். இது குறித்து அரசு விரைவில், பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.