ADDED : அக் 23, 2025 12:40 AM

அவிநாசி அடுத்த நாதம்பாளையம், புதுப்பாளையம் செல்லும் வழியில் 20க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் வசிக் கின்றனர். இவர்களுக்கு தீபாவளியையொட்டி, புத்தாடை மற்றும் உணவுகள் வழங்குமாறு கேட்டு தன்னார்வலர் ஈஸ்வரன் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, 'மகிழ்வித்து மகிழ்' அறக்கட்டளை நிறுவனர் லீலா மற்றும் உறுப்பினர்கள், இவர்களுக்கு புத்தாடை, இனிப்பு, உணவு வழங்கினர்.


