ADDED : ஜூலை 11, 2024 09:47 PM
கீழ்பென்னாத்துார்:திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் அடத்த காட்டுக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்து, 58.
இவரது மகன் பூங்காவனம், 28. நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முத்து கத்தியால் குத்தியதில், மகன் பூங்காவனம் படுகாயமடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். கீழ்பென்னாத்துார் போலீசார், தலைமறைவான தந்தை முத்துவை தேடி வருகின்றனர்.