ADDED : செப் 29, 2025 02:10 AM
ஆரணி: ஓடும் பஸ்சில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வேலுார் துணிக்கடை சேல்ஸ்மேனை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சைதாப்பேட்டையை சேர்ந்தவர் ஜெயசந்திரன், 47; வேலுாரிலுள்ள ஜவுளிக்கடையில் சேல்ஸ்மேன். ஆரணியிலிருந்து, வேலுாருக்கு, நேற்று காலை, ஒரு தனியார் பஸ்சில் சென்றார்.
அதே பஸ்சில் வந்த ஆரணியை சேர்ந்த, 20, வயது மாணவியிடம், ஜெயசந்திரன் சில்மிஷத்தில் ஈடுபட்டார். மாணவி கூச்சலிட்டதால், ஜெயசந்திரன் பஸ்சிலிருந்து இறங்கி தப்பினார். பயணியர் சிலர் அவரை விரட்டி பிடித்து, ஆரணி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் ஜெயசந்திரனை கைது செய்து, விசாரிக்கின்றனர்.


