Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ தேங்காய் விலை சரிவு ரூ.3.64 லட்சத்துக்கு ஏலம்

தேங்காய் விலை சரிவு ரூ.3.64 லட்சத்துக்கு ஏலம்

தேங்காய் விலை சரிவு ரூ.3.64 லட்சத்துக்கு ஏலம்

தேங்காய் விலை சரிவு ரூ.3.64 லட்சத்துக்கு ஏலம்

ADDED : டிச 03, 2025 07:46 AM


Google News
ப.வேலுார்: ப.வேலுாரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை தேங்காய் ஏலம் நடப்பது வழக்கம். கடந்த வாரம் நடந்த ஏலத்திற்கு, 28,140 தேங்காய்கள் வரத்தாகின. இதில், அதிகபட்சம் கிலோ, 65.69 ரூபாய்; குறைந்தபட்சம், 43.39 ரூபாய்; சராசரி, 55.79 ரூபாய் என, மொத்தம், 5.23 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

இதேபோல், நேற்று நடந்த ஏலத்திற்கு, 23,438 தேங்காய்கள் வரத்தாகின. இதில், அதிகபட்சம் கிலோ, 56.90 ரூபாய்; குறைந்தபட்சம், 37.81 ரூபாய்; சராசரி, 53.49 ரூபாய் என, 3.64 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில், தேங்காய் விலை சற்று சரிந்தே விற்பனை செய்யப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us