/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து ரூ.5 கோடி மோசடி செய்த தம்பதி கைதுவிவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து ரூ.5 கோடி மோசடி செய்த தம்பதி கைது
விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து ரூ.5 கோடி மோசடி செய்த தம்பதி கைது
விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து ரூ.5 கோடி மோசடி செய்த தம்பதி கைது
விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து ரூ.5 கோடி மோசடி செய்த தம்பதி கைது
ADDED : ஜூலை 02, 2024 07:15 AM
கீழ்பென்னாத்துார்: கீழ்பென்னத்துார் அருகே, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து, 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்த தம்பதியை, போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்-னாத்துார் அடுத்த சோ.கீழ்நாச்சிப்பட்டு கிரா-மத்தை சேர்ந்தவர் ஜெய்கணேஷ், 47; இவர், ஏந்தல் கிராமத்தில் நாம்மாழ்வார் அக்ரோ பார்ம்ஸ் என்ற பெயரில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து, அதற்கான தொகையை உடனுக்குடன் வழங்கி வந்தார். இத்தகவலால் அவரிடம் ஏராளமான விவசாயிகள் நெல் விற்-பனை செய்தனர். அவர்களுக்கு கடந்த, 6 மாதங்-களாக நெல்லுக்குண்டான பணத்தை காசோ-லையாக ஜெய்கணேஷ் வழங்கினர்.
விவசாயிகள் அதை வங்கியில் செலுத்தியபோது, கணக்கில் பணம் இல்லை என வந்துள்ளது. விவ-சாயிகள் கேட்டபோது, ஜெய்கணேஷ் உரிய பதி-லளிக்கவில்லை. தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம், 5 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து தலைமறைவாகி விட்டார்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள், மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதன்-படி, கீழ்பென்னாத்துார் போலீசார் விசாரித்து, மோசடியில் ஈடுபட்ட ஜெய்கணேஷ், அவர் மனைவி சுதா, 43, ஆகியோரை நேற்று முன்தினம் இரவு கைது செய்து, அவர்களிடமிருந்து, 2.50 லட்சம் ரூபாய், கார் மற்றும் புல்லட் ஆகிய-வற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.