/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ தி.மலையில் கூட்ட நெரிசல் பக்தர் பலி தி.மலையில் கூட்ட நெரிசல் பக்தர் பலி
தி.மலையில் கூட்ட நெரிசல் பக்தர் பலி
தி.மலையில் கூட்ட நெரிசல் பக்தர் பலி
தி.மலையில் கூட்ட நெரிசல் பக்தர் பலி
ADDED : செப் 25, 2025 11:20 PM
தி.மலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று கூட்ட நெரிசலில் பக்தர் பலியானார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் நாள் ஒன்றுக்கு, 6 கால அபிஷேகம் வீதம், ஒரு கால அபிஷேகத்திற்கு, 30 பேர் அனுமதிக்கப்படுவர்.
இவ்வாறு அனுமதிக்கப்படும் பக்தர்கள் மட்டுமே அர்த்த மண்டபத்தில் சென்று சுவாமி மற்றும் அம்மன் தரிசனம் செய்ய முடியும். ஒரு அபிஷேகத்திற்கு கோவில் நிர்ணயித்துள்ள கட்டணம், 2,500 ரூபாய் மட்டுமே. ஆனால், பல ஆயிரம் ரூபாய் வாங்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை, 6:00 மணிக்கு நடந்த சாயரட்சை அபிஷேகத்திற்கு, அர்த்தமண்டபத்தில், 30 பேர் மட்டுமே அமரக்கூடிய அளவில் இடம் உள்ள நிலையில், மணியக்காரர் ராஜா என்பவர், தன் புரோக்கர்கள் மூலம் பணத்தை வசூலித்து, 43 பக்தர்களை அனுமதித்தார்.
இதில் கூட்ட நெரிசலில் மூச்சு திணறல் ஏற்பட்டு, 10க்கும் மேற்பட்ட பக்தர்கள் மயக்கமடைந்தனர். அவர்களில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த சுரேஷ், 41, என்ற பக்தர் மூச்சு திணறி அங்கேயே பலியானார்.