Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ அக்கா கணவரை கொன்று நாடகமாடியவருக்கு காப்பு

அக்கா கணவரை கொன்று நாடகமாடியவருக்கு காப்பு

அக்கா கணவரை கொன்று நாடகமாடியவருக்கு காப்பு

அக்கா கணவரை கொன்று நாடகமாடியவருக்கு காப்பு

ADDED : செப் 14, 2025 03:36 AM


Google News
ஆரணி:அக்கா கணவரை அடித்து கொன்று, விபத்து நாடகமாடிய மாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி புதுக்காமூரைச் சேர்ந்தவர் கணபதி, 27; ஆட்டோ டிரைவர். இவர், ஆரணியைச் சேர்ந்த மோனிஷா, 23, என்பவரை, திருமணம் செய்தார். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.

கணவரை பிரிந்த மோனிஷா, குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசிக்கிறார். கணபதி வேலுாரில், வாடகை ஆட்டோ ஓட்டிக்கொண்டு அங்கேயே தங்கியிருந்தார்.

இந்நிலையில், தன் குழந்தைகளை கவனித்து வந்த மோனிஷாவின் தங்கையுடன் கணபதிக்கு பழக்கம் ஏற்பட்டு, அவரை இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க தொந்தரவு செய்து வந்தார். இதில், மோனிஷாவின் சகோதரர் மகேஷ்வரன், 24, ஆத்திரமடைந்தார்.

அவர், கணபதியை கொல்ல திட்டமிட்டு, இரு நாட்களுக்கு முன், வேலுார் சென்று, கணபதியுடன் மது குடித்தார்.

போதையில் மயங்கிய கணபதியுடன், ஆரணிக்கு ஆட்டோவில் சென்றார். வழியில், மோட்டூர் கிராமம் அருகே கணபதியை அடித்து கொன்றார்.

பின், ஆட்டோவை கவிழ்த்து, விபத்து நடந்தது போல நாடகமாடி தப்பினார்.

ஆரணி தாலுகா போலீசார் விசாரணையில், கணபதியை கொன்று மகேஷ்வரன் நாடகமாடியது தெரிந்தது.

போலீசார் அவரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us