/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/ அரசு பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிக்க பெற்றோருடன் மாணவர்கள் தர்ணா அரசு பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிக்க பெற்றோருடன் மாணவர்கள் தர்ணா
அரசு பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிக்க பெற்றோருடன் மாணவர்கள் தர்ணா
அரசு பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிக்க பெற்றோருடன் மாணவர்கள் தர்ணா
அரசு பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிக்க பெற்றோருடன் மாணவர்கள் தர்ணா
ADDED : செப் 16, 2025 02:20 AM
கீழ்பென்னாத்துார், கீழ்பென்னாத்துார் அருகே, அரசு பள்ளியில், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக்கோரி, அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் அடுத்த செவரப்பூண்டி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஒன்று முதல், 5 வரையிலான வகுப்புகளில், 46 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். இதனால், கூடுதல் ஆசிரியர்களை நியமனம் செய்ய, பள்ளி கல்வித்துறைக்கு ஊர்மக்கள் மனு அளித்தனர். ஆனால் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
இதை கண்டித்து நேற்று காலையில், பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறுக்கணித்து, பெற்றோருடன் சேர்ந்து, பள்ளி முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கல்வித்துறை அலுவலர்கள், வருவாய்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பள்ளிக்கு கூடுதலாக ஒரு ஆசிரியரை நியமித்து, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்ட மாணவ, மாணவியர் வகுப்பு
களுக்கு சென்றனர்.