/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ பள்ளி கூரை பெயர்ந்ததால் 2 இன்ஜினியர் 'சஸ்பெண்ட்' பள்ளி கூரை பெயர்ந்ததால் 2 இன்ஜினியர் 'சஸ்பெண்ட்'
பள்ளி கூரை பெயர்ந்ததால் 2 இன்ஜினியர் 'சஸ்பெண்ட்'
பள்ளி கூரை பெயர்ந்ததால் 2 இன்ஜினியர் 'சஸ்பெண்ட்'
பள்ளி கூரை பெயர்ந்ததால் 2 இன்ஜினியர் 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 25, 2025 01:26 AM
திருச்சி:திருச்சி அருகே கட்டி முடித்து ஒன்பது மாதங்களே ஆன அரசுப்பள்ளி வகுப்பறை கூரை பெயர்ந்து விழுந்த விவகாரத்தில், இரு இன்ஜினியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம், சிங்களாந்தபுரம் யூனியன் துவக்கப்பள்ளிக்கு, புதிய வகுப்பறை கட்டப்பட்டது. அந்த வகுப்பறை, ஒன்பது மாதங்களுக்கு முன் பயன்பாட்டுக்கு வந்தது.சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து, திங்கள் கிழமை பள்ளியை திறந்தபோது, வகுப்பறை கூரை கான்கிரீட் காரை பெயர்ந்து விழுந்து, சேர்கள், 'டிவி' சேதமடைந்திருந்தது. பள்ளி விடுமுறை நாளில் நடந்ததால், மாணவர்கள் தப்பினர்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணை முடிவில், துறையூர் யூனியன் இளநிலை பொறியாளர்கள் பெரியசாமி, தங்கராசு ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும், மற்றொரு இளநிலை பொறியாளர் செல்வராஜன் மீது துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
இந்த வகுப்பறை கட்டடத்தை கட்டிய ஒப்பந்தக்காரர் இந்திரஜித் என்பவரை, வரும் காலங்களில் ஒப்பந்தப்பணிகள் எடுக்காதவாறு பிளாக் லிஸ்ட்டில் வைக்கவும், திருச்சி கலெக்டர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.