/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ஆபாச படம் அனுப்பி மிரட்டல் 'மாஜி' காதலர் மீது வழக்குஆபாச படம் அனுப்பி மிரட்டல் 'மாஜி' காதலர் மீது வழக்கு
ஆபாச படம் அனுப்பி மிரட்டல் 'மாஜி' காதலர் மீது வழக்கு
ஆபாச படம் அனுப்பி மிரட்டல் 'மாஜி' காதலர் மீது வழக்கு
ஆபாச படம் அனுப்பி மிரட்டல் 'மாஜி' காதலர் மீது வழக்கு
ADDED : பிப் 02, 2024 01:03 AM
திருச்சி:திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே உள்ள வேம்பனுாரைச் சேர்ந்தவர் கருணாகரன், 24. இவர், அதே பகுதியில் உள்ள உறவுக்கார பெண்ணை காதலித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, இருவரும் சேர்ந்து போட்டோ எடுத்துள்ளனர்.
இந்நிலையில், அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்து, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அந்த பெண்ணை மீண்டும் தொடர்பு கொள்ள கருணாகரன் முயற்சித்தார். அந்த பெண்ணோ, அவருடன் பேசவில்லை.
இதனால் கோபமடைந்த கருணாகரன், தான் காதலித்தபோது, ஆபாச நிலையில் சேர்ந்து இருவரும் எடுத்த போட்டோக்களை, பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸாப்பில் அனுப்பி, அந்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து பெண்ணின் குடும்பத்தார், அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்ய தேடி வருகின்றனர்.


