/உள்ளூர் செய்திகள்/திருச்சி/தி.மு.க., நிர்வாகி ஆசியுடன் மணல் கடத்திய லாரி பறிமுதல்தி.மு.க., நிர்வாகி ஆசியுடன் மணல் கடத்திய லாரி பறிமுதல்
தி.மு.க., நிர்வாகி ஆசியுடன் மணல் கடத்திய லாரி பறிமுதல்
தி.மு.க., நிர்வாகி ஆசியுடன் மணல் கடத்திய லாரி பறிமுதல்
தி.மு.க., நிர்வாகி ஆசியுடன் மணல் கடத்திய லாரி பறிமுதல்
ADDED : ஜன 10, 2024 12:44 AM
உத்தமர்சீலி:திருச்சி மாவட்டம், உத்தமர்சீலி பகுதியில் உள்ள கிளிக்கூடு என்ற இடத்தில், சில இளைஞர்கள், சிமென்ட் சாக்கு மூட்டைகளில் அள்ளி விற்பனை செய்கின்றனர். இந்த முறைகேடான செயலுக்கு, பனையபுரம் பஞ்., தலைவர், தி.மு.க.,வைச் சேர்ந்த முத்துக்குமார் துணையாக இருக்கிறார்.
அதிகாலை, கிளிக்கூடு பகுதியில் லாரியில் சிலர் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். போலீசார் அங்கு சென்ற போது, மற்றவர்கள் தப்பினர்; டிரைவர் மட்டும் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், சேலம், மேச்சேரியை சேர்ந்த சிவக்குமார், 36, என்பதும், மணல் கடத்த வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து, 5 யூனிட் மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிந்து, டிரைவர் சிவக்குமாரை கைது செய்தனர். மேலும், சேலம், மேச்சேரியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் முருகன், 58, என்பவரை தேடுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக, எஸ்.பி., தனிப்படை போலீஸ்காரர் முத்துசாமி என்பவர், சிறுகனுாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.


