/உள்ளூர் செய்திகள்/வேலூர்/எருது விடும் விழாவில் காளை முட்டி வாலிபர் பலிஎருது விடும் விழாவில் காளை முட்டி வாலிபர் பலி
எருது விடும் விழாவில் காளை முட்டி வாலிபர் பலி
எருது விடும் விழாவில் காளை முட்டி வாலிபர் பலி
எருது விடும் விழாவில் காளை முட்டி வாலிபர் பலி
ADDED : பிப் 25, 2024 05:36 PM
வேலுார் :வேலுார் அருகே, எருது விடும் விழாவில், காளை முட்டியதில் படுகாயமடைந்த வாலிபர் உயிரிழந்தார்.
வேலுார் மாவட்டம், கணியம்பாடி அடுத்த நாகநதி கிராமத்தில், நேற்று முன்தினம் மாலை, எருது விடும் விழா நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின. இதை காண, பல்வேறு பகுதிகளிலிருந்து, 2,000க்கும் மேற்பட்டோர் வந்திருந்தன. அப்போது வாடிவாசலிலிருந்து புறப்பட்டு ஓடிய ஒரு காளை, பார்வையாளர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில், மலைக்கோடி கிராமத்தை சேர்ந்த நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த ராம்கி, 29, காளை முட்டி படுகாயமடைந்தார். அவரை, வேலுார் அரசு அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில் உயிரிழந்தார்.
இது குறித்து, வேலுார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், பலியான ராம்கிக்கு இரங்கல் தெரிவித்து, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.