ADDED : செப் 16, 2025 12:35 AM
வேலுார்: வேலுார் மாவட்டம், அணைக்கட்டு பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் வீரக்குமார், 31; ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2022ல் முகநுால் மூலம், வேலுார் அடுத்த பென்னாத்துாரை சேர்ந்த, 27 வயது பெண் அறிமுகமானார். இருவரும் காதலித்தனர்.
விடுமுறையில் வீரகுமார் ஊருக்கு வரும்போது நேரில் சந்தித்தனர். வீரகுமார், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பெண்ணுடன் பலமுறை தனிமையில் இருந்தார். அப்பெண்ணிடம், 35 லட்சம் ரூபாய் பணமும் வாங்கினார்.
பின், திருமணம் செய்து கொள்ளாமல் காலம் கடத்திய நிலையில், பேசுவதை தவிர்த்தார். பெண் புகார் படி, வேலுார் மகளிர் போலீசார், வீரக்குமார் அவரது குடும்பத்தினர் நான்கு பேர் மீது வழக்குப்பதிந்தனர். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்த வீரக்குமாரை கைது செய்தனர்.