/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மேல்களவாய் சங்கராபரணி ஆற்றில் ரூ.40 கோடியில் மேம்பாலம் பணி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் தகவல் மேல்களவாய் சங்கராபரணி ஆற்றில் ரூ.40 கோடியில் மேம்பாலம் பணி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் தகவல்
மேல்களவாய் சங்கராபரணி ஆற்றில் ரூ.40 கோடியில் மேம்பாலம் பணி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் தகவல்
மேல்களவாய் சங்கராபரணி ஆற்றில் ரூ.40 கோடியில் மேம்பாலம் பணி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் தகவல்
மேல்களவாய் சங்கராபரணி ஆற்றில் ரூ.40 கோடியில் மேம்பாலம் பணி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் தகவல்
ADDED : ஜூலை 25, 2024 11:32 PM

செஞ்சி: செஞ்சி - மேல்களவாய் இடையே உள்ள சங்கராபரணி ஆற்றின் தரைப்பாலம் 40 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலமாக கட்ட முதல்வர் அனுமதி வழங்கி இருப்பதாக பேரூராட்சி தலைவர் தெரிவித்தார்.
செஞ்சி பேரூராட்சி கூட்டம் நேற்று நடந்தது. செயல் அலுவலர் செந்தில்குமார், துணைச் சேர்மன் ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு, சேர்மன் மொக்தியார் தலைமை தாங்கி பேசுகையில், 'அமைச்சர் மஸ்தான், கோரிக்கையை ஏற்று, சிங்கவரம் சாலையில் துவங்கி மேல்களவாய் கூட்ரோடு வரை இருவழி சாலை அமைத்து, சங்கராபரணி ஆற்றில் மேம்பாலம் கட்ட 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாபின் அனுமதி வழங்கியுள்ளார். விரைவில் இதற்கான பணிகள் துவங்கும்' என்றார்.
தொடர்ந்து வரவு, செலவு கணக்கு 49 தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் சந்திரா, அஞ்சலை, கார்த்திக், சங்கர், சீனுவாசன், சங்கீதா, ஜான்பாஷா, சுமித்ரா, பொன்னம்பலம், சிவக்குமார், லட்சுமி, அகல்யா, மோகன் பங்கேற்றனர்.
5 முறை வலியுறுத்திய தினமலர் நாளிதழ்
சங்கராபரணி ஆறு வழியாக பள்ளி மாணவர்களும், விவசாயிகளும் அதிக அளவில் செல்வதால் மழை காலத்தில் வெள்ளம் ஏற்பட்டு பல கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டி இருந்தது.
எனவே இங்கு மேம்பாலம் கட்ட வேண்டும் என 5 முறை 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட்டு, அரசுக்கு வலியுறுத்தப் பட்டது.
தற்போது இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்ற முன் வந்திருப்பது இந்த வழியாக செல்லும் 40க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு மகிழச்சியை ஏற்படுத்தியுள்ளது.