/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பள்ளி மாணவியர் விடுதி சேர்க்கை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு பள்ளி மாணவியர் விடுதி சேர்க்கை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு
பள்ளி மாணவியர் விடுதி சேர்க்கை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு
பள்ளி மாணவியர் விடுதி சேர்க்கை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு
பள்ளி மாணவியர் விடுதி சேர்க்கை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு
ADDED : ஜூன் 26, 2024 03:09 AM

விழுப்புரம் : திருவெண்ணெய்நல்லுார் அரசு மாணவியர் விடுதியில், விதிகளை மீறி மாணவிகள் சேர்க்கை நடந்துள்ளதாக, கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் குமார் தலைமையில், பாதிக்கப்பட்ட அரசு பள்ளி மாணவிகள், பெற்றோர்களுடன், நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:
திருவெண்ணெய்நல்லுார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகள் தங்கி படிக்க வசதியாக, பள்ளி வளாகத்திலேயே அரசு மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது.
விடுதியில் சேர்க்கைக்கு, இடைநிலை வகுப்பு மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மாணவிகளுக்கு 75 சதவீத ஒதுக்கீடு.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப சூழ்நிலையில் வரும் மாணவிகளுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி சிறுபான்மையின மாணவிகள், துப்புரவு பணியாளர்களின் பிள்ளைகள், மாற்றுத் திறனாளிகளின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்காக மாவட்ட கண்காணிப்புக்குழு ஒப்புதலுடன், ஒவ்வொரு மாணவியர் விடுதியிலும், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மாணவிகள் சேர்க்கை இருக்க வேண்டும்.
ஆனால், திருவெண்ணெய்நல்லுார் அரசு மாணவியர் விடுதியில், விதிகளை பின்பற்றாமல் மாணவிகள் சேர்க்கை நடந்துள்ளது. இதனால், கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றுள்ளவர்களை விசாரணை செய்து, அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். ஏழை, எளிய மாணவிகளுக்கு, இவ்விடுதியில் சேர்ந்து தங்கி படிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.