ADDED : ஜூன் 02, 2024 05:16 AM

மயிலம்: செஞ்சியில், அமைச்சர் மஸ்தான் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மயிலம் வடக்கு மாவட்ட பிரதிநிதி பிரகாஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அமைச்சர் மஸ்தானுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் வீடூர் ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் விஜயன் மாவட்ட பிரதிநிதிகள் துரை, சசிகுமார், ஒன்றிய துணைச் செயலாளர் சுரேஷ், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பாலு, இளைஞரணி முத்துவேல் உட்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.