ADDED : ஜூலை 25, 2024 11:31 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க., சார்பில், மின் கட்டணம் உயர்வு, ரேஷன் பொருட்கள் சரியாக கிடைக்காதது, தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்காத கர்நாடக அரசு மற்றும் தி.மு.க., அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெருந்திட்ட வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மணிகண்டன், மாவட்ட தலைவர் கணபதி, பொருளாளர் தயாநிதி, துணை செயலாளர்கள் சுந்ரேசன், பாலாஜி, சூடாமணி, வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞரணி செயலாளர் பன்னீர்செல்வம் கண்டன உரையாற்றினார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதவன்முத்து, முருகன் உட்பட ஒன்றிய, பேரூர், நகர நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தும், காவிரிநீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும் பேசினர்.